TN Half Yearly Exam Official Time Table 2024
TN Half Yearly Exam: தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு டிசம்பர் 9-ந் தேதி முதல் டிசம்பவர் 23-ந் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தற்போது, 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களு்ககு டிசம்பர் 16 முதல் 23-ந் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

6-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை:
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் –ந் தேதி முதல் 23-ந் தேதி வரையும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி அறிவிப்பு வெளியானபோதே 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவனை வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 1 முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
அதன்படி, 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, டிசம்பர் 9-ந் தேதி தமிழ் தேர்வும், 10-ந் தேதி அவர்களின் விருப்ப மொழி பாடம், 12-ந் தேதி ஆங்கிலம், 16-ந் தேதி கணிதம், 18-ந் தேதி உடற்கல்வி, 20-ந் தேதி அறிவியல், 23-ந் தேதி சமூகஅறிவியல் பாடத்தின் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, காலை 10 முதல் 12 மணி வரை 6-ம் வகுப்புக்கும், 2 மணி முதல் 4 மணிவரை 7-ம் வகுப்புக்கும், தேர்வுகள் நடைபெறும்.
8th,9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை:
8-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 மணி முதல் 4.30 மணிவரையும், தேர்வு நடைபெறும். 10-ம் வகுப்புக்கு காலை 9.45 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும். 10-ம் வகுப்புக்கு டிசம்பர் 10-ச் தேதி தமிழ் தேர்வும், 11-ந் தேதி விருப்ப மொழி தேர்வும், 12-ந் தேதி ஆங்கில தேர்வும், 16-ந் தேதி கணித தேர்வும், 19-ந் தேதி அறிவியல் மற்றும் 23-ந் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும்.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை:
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ந் தேதி தமிழ், 10ம் தேதி ஆங்கிலம், 12ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், 16ம் தேதி உயிரியியல், தாவரவியல், வரலாறு, 18ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல், 20ம் தேதி இயற்பியல், பொருளியல், 23ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை:
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. டிசம்பர் 9-ம் தேதி தமிழ், 10ம் தேதி ஆங்கிலம், 12ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், 16ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 18ம் தேதி உயிரியியல், தாவரவியல், வரலாறு, 20ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல், 23ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள் தேர்வும் நடக்க உள்ளது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்க தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.